கால்பந்து திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் மைதானத்திற்குள், பாதுகாப்பு காரணங்களுக்காக மது பானங்களைக் கொண்டு செல்ல கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை முறியடிக்க ரசிகர் ஒருவர் கையாண்ட வினோதமான வழிமுறை தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த ரசிகர் ஒருவர் தனது செல்போனை மது பாட்டில் போல மிகத் துல்லியமாக வடிவமைத்து வைத்திருந்தார். பார்ப்பதற்கு சாதாரண செல்போன் போல காட்சியளித்த அந்தப் பொருளுக்குள் மதுவை மறைத்து வைத்திருந்த அவர், மைதானத்தில் போட்டியைக் கண்டு ரசித்தபடியே, மிகவும் சாதாரணமாக அதைத் திறந்து கிளாஸில் மதுவை ஊற்றி அருந்தினார்.

https://www.instagram.com/reel/DZjOnOsgAga/

இந்தக் காட்சிகள் அருகில் இருந்தவர்களின் கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. மைதானத்தில் இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தும், இத்தனை நூதனமாக யோசித்து ரசிகர் ஒருவர் மது அருந்திய விதம் பலரையும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. எனினும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட அந்த ரசிகரின் செயல் சமூக வலைதளங்களில் பலத்த விவாதங்களையும் உருவாக்கி வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version