அதிமுகவில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கவுதமி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்,  இஅதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்தும் தற்போது உள்ள அரசியல் சூழல் கருத்தில் கொண்டு, நான் சமூக சேவை செய்ய ஏதுவான வகையில் கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

கழகத்தில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை தனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய முன்னாள் அமைச்சர் பெருமக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பிற அணி மாநில செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூர் நகரக் கழக செயலாளர்களையும் மனதார வணங்கி நன்றி கூறி தன்னை கழகத்திலிருந்து விடுவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version