புதுச்சேரி வம்புப்பட்டு ஏரிப் பகுதியில் உணவு தேடி வந்த வெளிநாட்டுப் பறவையான அரிவாள் மூக்கன், காலில் ஏற்பட்ட கடுமையான காயத்தினால் பறக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளது. அந்தவழியாகச் சென்ற சில உள்ளூர் இளைஞர்கள் இதைக் கவனித்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்தப் பறவையைப் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் அதற்கு முதற்கட்டமாகத் தண்ணீர் கொடுத்துப் பாதுகாத்த அவர்கள், உடனடியாக வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற வனத்துறை ஊழியர்கள், அந்த அரிய வகை பறவையை மேல் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். காயமடைந்த பறவைக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், முழுமையாகக் குணம் அடைந்தவுடன் அது மீண்டும் அதன் இயற்கை வாழிடத்திலேயே சுதந்திரமாக விடப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்த வெளிநாட்டுப் பறவையை காப்பாற்றிய இந்த இளைஞர்களின் மனிதநேயச் செயல் அப்பகுதி மக்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version