கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் கொடுப்பதாகக் குற்றம்சாட்டி, அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் தர்ணாவில் ஈடுபட்டார்.
கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் கொடுப்பதாக அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் குற்றம்சாட்டியுள்ளதோடு, இது குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் அவர் நேரில் சென்று புகார் அளித்தார்.
ஆனால், புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையையும் தேர்தல் அதிகாரிகள் எடுக்கவில்லை எனக் கூறி, அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் கோவை கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆதரவாளர்களோடு அமர்ந்து தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டதால், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
