திருவள்ளூர் மாவட்டத்தின் தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நிகழ்ந்த, அம்மோனியா வாயு கசிவு காரணமாக 11 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையில், உயிரிழந்தோர்களில் 9 தொழிலாளர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் 2 தொழிலாளர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேல்ஸ் மருத்துவமனையில் 29 தொழிலாளர்களும், வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் 18 தொழிலாளர்களும், ராஜீ்வ் காந்தி அரசு மருத்துவமனையில் 10 தொழிலாளர்களும், ஸ்டான்லி மருத்துவமனையில் 10 தொழிலாளர்களும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஸ்டான்லி மருத்துவமனையில் தமிழ்நாட்டை சேர்ந்த 6 நபர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள தொழிலாளர்களுக்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது என தமிழக சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.
