வீ த லீடர்ஸ் அமைப்பின் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியுள்ளதாவது;-
இன்று அறிவிக்கப்பட்ட 72-வது தேசிய திரைப்பட விருதுகளில், தமிழகத் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு திரைப்படங்களும் கலைஞர்களும் தேசிய அளவில் கவுரவிக்கப்பட்டுள்ளனர்.
சிறந்த தமிழ்த் திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்ட ‘ராயன்’ திரைப்படக் குழுவினருக்கும், தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் விருது பெற்ற ‘கேப்டன் மில்லர்’ திரைப்படக் குழுவினருக்கும், அதே திரைப்படத்திற்காக சிறப்பு பாராட்டு பெற்ற நடிகர் தனுஷ் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், ‘அமரன்’ திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநர் விருது பெற்ற ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த பின்னணி இசை விருது பெற்ற ஜி.வி. பிரகாஷ், சிறந்த படத்தொகுப்பு விருது பெற்ற ஆர். கலைவாணன் ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள்.
‘மகாராஜா’ திரைப்படத்திற்காக சிறந்த சண்டைப் பயிற்சியாளர் விருது பெற்ற அனல் அரசு, சிறந்த துணை நடிகை விருது பெற்ற சச்சனா நமிதாஸ், ‘மெய்யழகன்’ திரைப்படத்திற்காக சிறப்பு பாராட்டு பெற்ற ஒலிக்கலவை பொறியாளர் சுரேன் ஜி., மேலும் ‘Blue’ (Non-Feature) திரைப்படத்திற்காக சிறந்த ஒலி வடிவமைப்பு தேசிய விருது பெற்ற டி.எஸ். ஹரிஹர சுதன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்த் திரையுலகின் பெருமையை தேசிய அளவில் உயர்த்திய அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
