தமிழ்நாட்டில் 2018 முதல் 11 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

பதினொன்றாம் வகுப்பில் தோல்வி அடைந்தாலும் அவர்கள் பன்னிரெண்டாம் வகுப்புக்கு செல்லலாம் ஆனால் அதனை அரியர் தேர்வாக தொடர்ந்து எழுதி வெற்றி பெற வேண்டும்.

11 மற்றும் 12 ஆம் வகுப்பு என இரண்டு வகுப்புகளுக்கும் சேர்த்து ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தான் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டு முதல் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதாக ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளில் பதினொன்றாம் வகுப்பு படித்து பதினொன்றாம் வகுப்பிலே தோல்வி அடைந்தவர்களுக்கு அந்த அரியர் தேர்வு தொடர்ந்து நடத்தப்படுமா அல்லது அவையும் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் இருந்து வந்தது…

கடந்த ஆண்டுகளில் பிளஸ் ஒன் தேர்வு தோல்வியடைந்த மாணவர்களுக்கு தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளி கல்வி துறையின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version