தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் வரும் மே 30-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களை ஒட்டியுள்ள பின்வரும் 19 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, தேனி, மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, தேனி, திண்டுக்கல், குமரி, கோவை, திருப்பூர், மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் எனவும், சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், வெயிலின் தாக்கம் ஓரளவுக்குக் கட்டுக்குள் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 37°C முதல் 38°C வரை பதிவாக வாய்ப்புள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version