நாடு முழுவதும் எரிபொருள் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 4-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையேயும், வாகன ஓட்டிகளடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மாற்றம் மற்றும் நுகர்வுத் தேவைக்கேற்ப, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில், தற்போதைய புதிய விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.46 உயர்ந்து ரூ.107.77க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.2.57 உயர்ந்து ரூ.99.55க்கும் விற்பனையாகிறது.

கடந்த 14 நாட்களில் மட்டும் நான்கு முறை விலை உயர்த்தப்பட்டதன் காரணமாக, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 108 ரூபாயை நெருங்கியுள்ளது. அதேபோல், டீசல் விலையும் 100 ரூபாயைத் தொடும் நிலைக்கு வந்துள்ளது.

இந்தத் தொடர் விலை உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துச் செலவு அதிகரித்து, காய்கறிகள் உள்ளிட்ட பிற பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நடுத்தரக் குடும்பத்தினரும் வணிகர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை: 

பெட்ரோல் விலை:

டெல்லியில் ரூ.102.12(+2.61), கொல்கத்தா ரூ.113.51(+2.87), மும்பை ரூ. 111.21 (+2.72)க்கு விற்பனையாகிறது

டீசல் விலை: டெல்லி ரூ.95.20 (+2.71), கொல்கத்தா ரூ.99.82 (+2.80), மும்பை ரூ.97.83 (+2.81) க்கு விற்பனையாகிறது

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version