தமிழக முதல்வர் விஜய் ஜோசப் இறுதியாக நடித்த திரைப்படமான ஜனநாயகன் பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி இன்று தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இன்று வெளியானது.
அதனைவிஜய் ரசிகர்கள் இதனை பெரும் திருவிழா கொண்டாடி மகிழ்ந்தனர். மேளம், தாளம், டிஜே நடனம் என ரசிகர்கள் திரையரங்கின் முன்பு கொண்டாடி மகிழ்ந்தனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் பாபு சினிமாஸ் திரையரங்கில் தமிழக அமைச்சர்கள் எஸ் பி கே தென்னரசு மற்றும் ஆர்.வீ. ரஞ்சித்குமார் ஆகியோர் கழக நிர்வாகிகள் என பல திரைப்படம் கண்டு ரசித்தனர்.
திரைப்படம் காண வரும் ரசிகர்கள் பசியாலும் வகையில், அமைச்சர் தென்னரசு ஏற்பாட்டின் பேரில் சிக்கன் பிரியாணி, லட்டு, ரைத்தா , கத்திரிக்காய் தொக்கு என உணவுகள் வகைகளை தங்கள் கைகளால் பரிமாறினார்.

மேலும் வனத்துறை அமைச்சர் சார்பில் ரசிகர்களுக்கு சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும் வகையில் பல்வேறு மரக்கன்றுகளுக்கும் வழங்கினர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version