அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்ட காலை உணவுத்திட்டம் நடுநிலை பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2022ல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து 2023ல் காலை உணவு விரிவாக்கத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து 2024ல் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பயிலும் சுமார் 3.05 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்தநிலையில், அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம், நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுவரை 1 முதல் 5ம் வகுப்பு வரை இருந்த காலை உணவுத் திட்டம் 6, 7, 8ம் வகுப்புகள் வரை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதி காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
