அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஏககாலத்தில் 30 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் தண்டனை விவரங்கள் குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி செய்தியாளர்களை சந்தித்தார்…..
அப்போது பேசிய அவர்…..
முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை 30 ஆண்டுகள் வழங்கப்பட்டுள்ளது, ஆயுள் தண்டனையை முழுவதுமாக அனுபவிக்க வேண்டும், இந்த காலத்தில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படாது, புலன் விசாரணை மிகவும் சிறப்பாக நடைபெற்றது….
11 குற்றச்சாட்டுகளுக்கும் அரசு தரப்பில் வாய்மொழியாகவும் ஆவணப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் அனைத்து குற்றச்சாட்டுக்கும் நீதிமன்றத்தில் அனைத்து ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் ஆதாரங்கள் திருப்திகரமாக இருந்ததால்தான் இவ்வளவு பெரிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு கிடைத்துள்ளது என்று அவர் அரசு தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக கூறினார்….
மேலும் பேசிய அவர் இந்த வழக்கில் முக்கிய சாட்சி என்றால் அது ஞானசேகரன் பயன்படுத்திய தொலைபேசி தான், அவர் சமூக வலைத்தளங்களில் எதையெல்லாம் பயன்படுத்தினார் உள்ளிட்டவைகள் அதிலிருந்து அதை நாங்கள் சோதனை செய்ய அனுப்பினோம்., சம்பவ தினத்தன்று அந்த தொலைபேசியின் நடவடிக்கை தொடர்பாக ஆய்வு செய்தோம், அப்பொழுது அந்த தொலைபேசி ஏரோப்ளேன் மூடில் போடப்பட்டுள்ளது என்று அறிவியல் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது, சம்பவ நேரத்தன்று ஏரோபிளேன் மூடில் அந்த தொலைபேசி போடப்பட்டது என்று ஆவணபூர்வமாக அந்த நிபுணர் வாய்மொழியாக வந்து வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்று கூறிய அவர் அவர் ஏர்டெல் சிம்மை பயன்படுத்தி உள்ளார் என்றார்….
இந்த வழக்கில் இது தொடர்பாக வேறு ஒரு நபர் உள்ளார் என்று பேசினால் அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கில் ஒருவர் தான் குற்றவாளி என்று கூறிய அவர் ஆதாரப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் அரசு தரப்பில் வாதிட்டு நிரூபித்துள்ளோம், நீதிமன்றம் அறிவித்துள்ள அபராதத்தை அந்த பெண்ணிற்கு கொடுக்க வேண்டும் என்று நீதிபதி சொல்லியுள்ளார் என்றார்…..