சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்றும் (ஜூலை 28) நாளையும் (ஜூலை 29) மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாக, இன்று மற்றும் நாளை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 28 முதல் 30-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் இயல்பை விட 2° முதல் 4° செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1ம் தேதி கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version