இந்தியாவை போலியோ இல்லாத நாடாக்கும் முனைப்போடு ஆண்டு தோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் காலை முதல் மாலை 5 மணி வரை சுமார் 53 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
போலியொ சொட்டு மருந்து முகாமினை சென்னையில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.
பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் முகாமினைத் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கியதோடு, பொம்மைகளையும் பரிசளித்தார்.
சொட்டு மருந்து வழங்கும்போது இயல்பாகவே குழந்தைகளை வாயைத் திறக்கச் செய்வதற்காக முதலமைச்சரும் தனது வாயைத் திறந்து காட்டி, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.
இன்று நடைபெறும் முகாமில் கலந்துகொள்ள முடியாத குழந்தைகளுக்காக நாளையும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
