காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை – தென்கலை பிரச்னை அவ்வப்போது பூதாகரமாக வெடித்து வருகிறது. அந்த வகையில், வரதராஜ பெருமாள் கோயிலில் திருஅவதார உற்சவம் எனும் பெருமாளின் பிறந்தநாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு அலங்காரத்தில் மூலவர் தேவராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

பெருமாளின் கருவறை மண்டபத்தில் அமர்ந்து தாதாச்சாரியாரி பிரிவினர் ஸ்தோத்திர பாடல் பாடுவதை வழக்கமாகவும், உரிமையாகவும் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தாதாச்சாரியார் பிரிவினர் ஸ்தோத்திர பாடல் பாடுவதில் தங்களுக்கும், உரிமை வழங்க வேண்டும் என கேட்டு தென்கலை ஐயங்கார்கள் பிரிவினர் திடீர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏராளமான போலீசார் கோயில் கருவறை முன்பு குவிக்கப்பட்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version