கோவை அருகே பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி, கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
கோவை சூலூர் பகுதியில் வசித்து வந்த 10 வயது சிறுமி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரெனக் காணாமல் போனார். இதைத்தொடர்ந்து, குடும்பத்தினர் அவரைத் தேடியநிலையில், கண்ணம்பாளையம் ஏரிக்கரைப் பகுதியில் சிறுமி கொலை செய்யப்பட்டு உயிரிழந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவம் மக்களிடையே பெரும் சோகத்தையும், குற்றவாளிகள் மீது கடும் கோபத்தையும் ஏற்படுத்தியள்ளது. சிறுமி கொலை தொடர்பாக கார்த்தி மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கார்த்திக்கு ஜூன் 5ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கைதான போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றதால், கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டதன் காரணமாக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கார்த்தி சிகிச்சைப் பெற்று வருகிறார். மற்றொரு நபரான மோகன்ராஜ் வரும் 27ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் பேசிய முதலமைச்சர் விஜய், இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, மிகக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்வதாக தெரிவித்தார். துயரமான இந்த நேரத்தில் உங்களது குடும்பத்தினருக்குத் துணையாகத் தமிழக அரசு இருக்கும் என்று முதலமைச்சர் விஜய் உறுதியளித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version