டிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்.’ (GDN) திரைப்படம் வெளியாகும் முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம், தற்போது IMDb வெளியிட்டுள்ள ’இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய திரைப்படங்கள் மற்றும் தொடர்கள்’ (Most Anticipated New Indian Movies and Shows) பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

ஆகஸ்ட் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படம், IMDb-ன் ரியல்டைம் தரவரிசையில் 11.1 சதவீத மதிப்பெண் பெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்புகளில் ஒன்றாக ‘ஜி.டி.என்.’ இடம்பிடித்துள்ளது.

‘ராக்கெட்ரி’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர். மாதவன் இணைத் தயாரிப்பாளராக உருவாகியுள்ள ‘ஜி.டி.என்.’ படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் ஆர். மாதவன் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில் ஆர். மாதவனுடன் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, கருணாகரன், அதிதி பாலன், கனிகா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெற்ற பிரம்மாண்டமான டிரெய்லர் வெளியீட்டு விழாவும், டிரெய்லருக்கு கிடைத்த வரவேற்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் ஜி.டி. நாயுடுவாக ஆர். மாதவன் மேற்கொண்டுள்ள தோற்ற மாற்றம், வரலாற்றுப் பின்னணி, பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் வலுவான கதைக்களம் ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஜி.டி. நாயுடுவின் சாதனைகள் மட்டுமல்லாமல், அவரது புதுமை, விடாமுயற்சி, உயர்ந்த லட்சியம் மற்றும் தேசப்பற்றையும் இந்த திரைப்படம் கொண்டாடும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version