காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பதவி ஏற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் பல்வேறு முன்னேற்றங்கள் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளன.
புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் தங்கள் துறையில் நல்ல துவக்கத்தை துவக்கி உள்ளனர்
காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இரண்டு அமைச்சருடன் சிறப்பாக செயல்பட ஆரம்பித்துள்ளது கட்சிக்குள் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் புதிய ஆட்சிக்கு ஆறு மாத காலம் பொறுத்திருந்து பார்ப்போம் என கூறிவிட்டு ஐந்து வாரம் கூட ஆகாத நிலையில் தற்போதே கதற ஆரம்பித்துவிட்டனர்.
தமிழ் தேசியம் என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் இந்துத்துவா சக்தி தான் செந்தமிழன் சீமான்.
எந்த சித்தாந்தத்தையும் மையப்படுத்தாத சீமான், எங்கே பிரதிநிதித்துவம் கிடைக்கிறதோ அங்கே கூவுவார். இப்போ அவர் காங்கிரசை நோக்கி கூறுகிறார். அதற்கு பின்னால் இருந்து யாரோ காங்கிரசை எதிர்த்து கூவுங்கள் உங்களுக்கு வேண்டியதை பண்ணி கொடுக்கிறோம் எனக் கூறியுள்ளனர். இப்போது அவர் திரள்நிதியை மையப்படுத்தி கூவுகிறாரா அல்லது உதயநிதியை மையப்படுத்தி கூவுகிறாரா என தெரியவில்லை.
தன்னுடைய தவறை ஏற்றுக்கொள்ளாதவர்கள்தான் காங்கிரஸ் கட்சியை தாறுமாறாகப் பேசுவார்கள்.
காமராஜர் ஆட்சிக்குப் பின்பு திராவிட மடல், திராவிட மாடல் ஆட்சிக்குப் பிறகு விஜய் மாடல் ஸ்டார்ட் பண்ண வேண்டும்.
விஜய் மாடல் ஆட்சியை க்ளோஸ் பண்ண முயன்றால் தமிழ்நாடு சிக்கலுக்குள் ஆகிவிடும்.
