தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டிய செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது;-
ஜனநாயக சக்தியில் அனைத்தும் வகுப்புவாத சக்திகளை எதிர்த்து போரிட வேண்டும். அதுதான் எங்கள் நிலை.
இந்தியா ஒரு பன்முக நாடு. பன்முகத்தின் அடித்தளம் மதச்சார்பின்மை. உலகில் வேற எந்த நாட்டிலும் நிலவாத இந்த அரசியல் விழுமைகளை பாதுகாப்பதுதான் நமது முதல் கடமை. எனவே மத அடிப்படைவாத சக்திகளை தனிமைப்படுத்த, முறியடிக்க, ஜனநாயக சக்திகள் யாவும் ஓரணியில் திரள வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு.
எனவே அந்த வகையில் ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றுபட்டு வகுப்புவாத பேர அபாயத்தை தடுக்க வேண்டும்.
கட்சிகள் ஒன்றுடன் ஒன்று இருப்பது, போட்டியிடுவது, வெற்றி பெறுவது, தோல்வி அடைவது இயல்பு. ஆனால் தேசத்தின் ஒற்றுமையை ஒருமைப்பாட்டை சிதைக்கிற வகுப்புவாத சக்தியை நாம் தனிமைப்படுத்த வேண்டியது அரசியலில் நமது முதல் கடமை.
பாஜக-வை வீழ்த்த திமுக, தவெக ஒன்றிணைய வேண்டும் என திருமாவளவன் கூறுவது ஏற்புடையதே என்று கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version