உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் கிரிக்கெட் வீரர்களில் இந்திய வீரர்கள் எப்போதும் முன்னணியில் இருக்கிறார்கள். ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விட அதிக உடல் உழைப்பையும் சகிப்புத்தன்மையையும் கோருபவை. எனவே, டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எவ்வளவு சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை வழங்குகிறது என்ற சுவாரசியமான விவரங்கள் வெளியாகியுள்ளன.
பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் வீரர்கள் எந்தப் பிரிவில் இருந்தாலும், அவர்களுக்குப் போட்டிகளின் அடிப்படையில் தனியாகக் கட்டணம் வழங்கப்படுகிறது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரருக்கு போட்டி கட்டணமாக மட்டும் ரூ.15 லட்சம் வழங்கப்படுகிறது. இது தவிர, ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சமும் கட்டணமாக வழங்கப்படுகிறது.
இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் பக்கமாக கவனம் செலுத்துவதை ஊக்குவிப்பதற்காக, பிசிசிஐ ஒரு புதிய ஊக்கத்தொகை திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, ஒரு சீசனில் ஒரு வீரர் எத்தனை சதவீத டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறார் என்பதைப் பொறுத்து இந்த ஊக்கத்தொகை மாறுபடும்:
ஒரு சீசனில் 50 சதவீதத்திற்கும் குறைவான டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடினால் கூடுதல் ஊக்கத்தொகை எதுவும் கிடைக்காது. அடிப்படை கட்டணமான ரூ.15 லட்சம் மட்டுமே வழங்கப்படும்.
போட்டி கட்டணத்துடன் கூடுதலாக ஒரு போட்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை கிடைக்கும். பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காமல் மாற்று வீரராக இருந்தால் போட்டிக்கு ரூ.15 லட்சம் ஊக்கத்தொகை தரப்படும்.
போட்டி கட்டணத்துடன் கூடுதலாக ஒரு போட்டிக்கு ரூ.45 லட்சம் ஊக்கத்தொகை கிடைக்கும். (அதாவது ஒரு போட்டிக்கு மொத்தம் ரூ.60 லட்சம்). ஒரு போட்டிக்கு ரூ.22.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
உதாரணமாக, இந்திய அணி ஒரு சீசனில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் கேப்டன் ரோஹித் சர்மா அல்லது விராட் கோலி போன்ற வீரர்கள் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினால் அவர்களின் வழக்கமான டெஸ்ட் போட்டி கட்டணம்ரூ. 1.5 கோடி. 75%-க்கும் மேல் விளையாடியதற்கான கூடுதல் ஊக்கத்தொகை ரூ. 4.5 கோடி ஆகும். இதன் மூலம் ஒரு சீசனில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடுவதன் வழியாக ஒரு வீரர் ரூ.6 கோடி வரை சம்பாதிக்க முடியும்.
இந்தத் தொகையானது வீரர்களின் வருடாந்திர மத்திய ஒப்பந்த சம்பளம் (Grade A – ரூ5 கோடி, Grade B – ரூ.3 கோடி, Grade C – ரூ.1 கோடி) மற்றும் ஐபிஎல் வருமானம், விளம்பர வருவாய் ஆகியவற்றுக்கு முற்றிலும் தனிப்பட்டதாகும். இதனால் தான் இந்திய கிரிக்கெட் வீரர்கள் உலகின் மிகப்பணக்கார விளையாட்டு வீரர்களாக வலம் வருகின்றனர்.
