மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மத்திய அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்து வருபவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்திர பிரதான் ஆவார்.
மத்திய அரசு நடத்தும் நீட் மற்றும் யூசிஜி தேர்வுகளில் ஏற்பட்ட குழப்பம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி இவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழங்கி வருகின்றன. புதிதாக உருவாகியுள்ள காக்ரோச் ஜனதா பார்ட்டியும் இதற்கான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. சமூக ஆர்வலரான சோனம் வாங்க்சுக் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
அண்மையில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வு குழப்பங்களுக்கு காரணமான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் காக்ரோச் ஜனதா பார்ட்டி தரப்பில் டெல்லியில் நாடாளுமன்றம் வளாகம் உள்பட பல்வேறு இடங்களில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மாணாக்கர்கள், இளைஞர், இளைஞிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தன் முனைப்போடு கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தின் போது காவல்துறையினருடன் ஏற்பட்ட கல்வீச்சு மற்றும் தள்ளுமுள்ளுவைத் தொடர்ந்து போலீசாரும், துணை ராணுவப் படையினரும் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதுமாணவர்கள் போராட்டத்தை நாடு முழுவதும் முன்னெடுத்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது காங்கிரஸ் எம்.பிக்களும் ராகுல்காந்தி தலைமையில் பிரதமர் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்.பிக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.
தமிழ்நாடு, பீகார், மேற்குவங்கம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிராகவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் போராட்டங்கள் தொடர்கின்றன.
கடந்த 10 நாட்களாக நிலவி வரும் இந்தபரபரப்பின் ஒரு கட்டமாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது பதவி விலகல் குறித்து2 பக்க கடிதம் ஒன்றையும் அவர் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் நீட் தேர்வு கசிவுக்கு நான் பொறுப்பேற்றுக் கொண்டேன், இளைஞர்களின் கனவுகளாஇ தான் மதிப்பதாகவும், இளைஞர் சக்தியே நாட்டின் உண்மையான பலம் எனவும், நாட்டின் இளைஞர் சக்தி குழப்பம் செய்வோரின் வலையில் வீழ்வதை அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியுள்ளார்.
தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை தங்கள் போராட்டத்தின் வெற்றியாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் ராஜினாமா செய்தபோது, நீட் தேர்வு ரத்து கோரிய போராட்டம் தொடருமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
