தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசார வேலைகளிலும், கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாகவும் பேச்சுவார்த்தையை மும்முரமாக நடத்தி வருகின்றனர். இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியைப் போலவே விஜய்யின் தவெக கட்சியிம் மத்தக் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்து களம்காண இருக்கிறது.

முதல்முறையாக களம் காணும் தவெகவினர், செய்வதறியாது பல இடங்களில் பரிசுப் பொருட்களை வெளிப்படையாக விநியோகம் செய்து சர்ச்சையில் சிக்கிக் கொள்கின்றனர். தேர்தல் தேதி அறிவித்தது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது. ஆங்காங்கே பறக்கும் படையினர் அனுமதிக்கப்பட்ட அளவை விட எடுத்துச் செல்லப்படும் பொருட்கள் மற்றும் பணத்தை பிடித்து பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில்,

திருச்செந்தூர் தொகுதி முழுவதும் தவெக சார்பில் குக்கர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அந்தக் குக்கரில் இடம்பெற்றுள்ள ஸ்டிக்கரில் விசில் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அந்த ஸ்டிக்கரில் தவெக நிர்வாகி ஜே.கே.ஆர் முருகன் என்பவரின் பெயர் மற்றும் புகைப்படம் ஆகியவை இடம்பெற்றுள்ளது. இந்தக் குக்கருடன் விசில், கடலைமிட்டாய் கட்சி பார்டர் கொண்ட துண்டு ஆகியவற்றை கட்சி தொண்டர்கள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் கொடுத்து வருகின்றனர். உடன்குடி பகுதியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இந்த குக்கரை தவெகவினர் வீடு வீடாக சென்று விநியோகம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version