தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோருக்கு கடந்த 1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று திருமணம் நடைபெற்றது. 26 வருடங்கள் இணைந்து வாழ்ந்த தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்தநிலையில், விஜய்யிடம் இருந்து விவகாரத்து வழங்க கோரி அவரின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், கடந்த 2021 ஏப்ரல் முதல் நடிகர் விஜய் ஒரு பிரபல நடிகையுடன் உறவில் இருந்ததை அறிந்து மனமுடைந்ததாகவும், அதுகுறித்து 2022 வரை பேசியும் பலனில்லை என்றும், கடந்த 4 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்தாலும் கணவன்-மனைவியாக வாழாமல் பிரிந்தே இருப்பதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார்.

தமக்கும், தன் இரு பிள்ளைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாமல் முதல்வர் விஜய் முழுமையாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாக சங்கீதா தன் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

தங்களுடைய திருமண பந்தத்தை ரத்து செய்து விவாகரத்து வழங்க வேண்டும்; நிரந்தர ஜீவனாம்சம் அளிக்க வேண்டும்; வழக்கு முடியும் வரை அல்லது மாற்று ஏற்பாடு செய்யும் வரை தற்போதுள்ள நீலாங்கரை இல்லத்திலேயே வசிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், இதுதொடர்பான விசாரணை இறு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, பாதுகாப்பு காரணங்களுக்காக இருதரப்பும் நேரில் வராமல் ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் ஆஜராக அனுமதி கோரப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version