தமிழ்நாட்டில் மீண்டும் திமுக கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் கடந்த 23-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பினை பல்வேறு நிறுவனங்கள் நடத்தியுள்ளன. அதன் முடிவுகள் இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியிடப்பட்டது.

இதில் என்.டி.டி.வி நடத்திய கருத்துக்கணிப்பின்படி ஆளும் திமுக கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. திமுக கூட்டணி 125 முதல் 145 இடங்களைக் கைப்பற்றும் எனவும், அதிமுக 65 முதல் 80 இடங்களில் வெற்றி பெறும், விஜய்யின் தவெக 18 முதல் 24 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு 02-06 இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது.

MATRIZE  நிறுவன தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 122 -132 இடங்களையும், அதிமுக 87 – 100 இடங்களையும்,  தவெக 12- 16 தொகுதிகளையும் நாதக 01-06 தொகுதிகளையும் கைப்பற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பப்ளிக் டிவியின் P-Marq கருத்துக்கணிப்பில் திமுகவுக்கு 125  -145, அதிமுகவுக்கு 65-85, தவெகவுக்கு 16-26 , நாதகவுக்கு 01-06 இடங்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னம்பலம் கருத்துக்கணிப்பின்படி திமுக கூட்டணிக்கு 155, அதிமுக கூட்டணிக்கு 72, தவெகவுக்கு 5,

அக்னி நிறுவன கருத்துக்கணிப்பில் திமுகவுக்கு 169,  அதிமுகவுக்கு64, தவெகவுக்கு 1 நாதகவுக்கு பூஜ்யம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாணக்யா நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில்  திமுககூட்டணிக்கு 145- 160, அதிமுக கூட்டணிக்கு 50-65, தவெகவுக்கு 13-18, நாதகவுக்கு 05-08 இடங்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக ஐந்து நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின்படி திமுக கூட்டணியே மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version