தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களை 8 மண்டலங்களாக பிரித்து மண்டல பொறுப்பாளர்கள் நியமித்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆ ராசா, தங்கம் தென்னரசு, கனிமொழி சக்கரபாணி, செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மண்டல பொறுப்பாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

திமுக எம்எல்ஏக்களின் செயல்பாடுகள், தொகுதிகளில் கட்சியில் உள்ள கோஷ்டி பூசல் உள்ளதா? அரசின் திட்டங்கள் பொதுமக்களிடம் எந்த அளவுக்கு சென்று சேர்ந்துள்ளது,இன்னும் பொதுமக்களிடம் சென்று சேராத திட்டங்கள் என்னென்ன? உள்ளிட்ட கேள்விகள் அடங்கிய விண்ணப்ப படிவங்களை நிர்வாகிகளிடம் கொடுத்து நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றனர்.

இதையும் படிக்க: பலிவாங்கும் நீட்… பறிபோகும் உயிர்கள்.. How many students died 2025 because of NEET in Tamilnadu?

இன்று சென்னை ,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,மாவட்ட சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டத்திலும் நிர்வாகிகளுக்கு விண்ணப்பங்களை ஆ.ராசா வழங்கி உள்ளார்.

நிர்வாகிகளின் கருத்தைப் பொறுத்து வேட்பாளர் தேர்வு, தேர்தல் பணிகளை மேலும் தீவிரப்படுத்த மண்டல பொறுப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

Share.
Leave A Reply

Exit mobile version