2026 சட்டமன்ற தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வரும் திமுக. சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை சந்தித்து கருத்துகளை கேட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
2021 தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி சேர்ந்து 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக, பாமக, பாஜக, உள்ளிட்ட எதிர்கட்சிகள் 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
2021 தேர்தலில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் தோல்வியை சந்தித்த 75 தொகுதிகள் மற்றும் வீக்கான தொகுதிகள் என மொத்தம் 100 தொகுதிகளை குறி வைக்கும் திமுக. ஒன் டூ ஒன் சந்திப்பிற்கு 2021 ல் தோல்வியை சந்தித்த சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதலில் அழைக்கும் திமுக தலைமை.
2021 ல் கைவிட்டு போன தொகுதியை திமுக வசம் கொண்டு வர களத்தில் அதிரடி வியூகம் அமைக்கும் திமுக.. 2026 ல் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு வைத்து தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் திமுக.