திமுக இளைஞர் அணி புதிய நிர்வாகிகளுக்கான 2026 தேர்தல் பணி பயிற்சிப் பாசறைக் கூட்டம் நடைபெற இருப்பதாக, திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து, புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள், பகுதி வாரியாக நடைபெற உள்ளன. மண்டலம் 1 க்கு உட்பட்ட ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள பயிற்சிப் பாசறைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதன்படி, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், ஆயிரம் விளக்கு கிழக்கு பகுதிக்கு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. ஆயிரம் விளக்கு மேற்குப் பகுதிக்கு, சூளைமேடு அண்ணா நெடும்பாதை, ராகவன் தெரு, மீனாட்சி நாராயணன் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
கூட்டத்தில், வரும், 2026 சட்டசபை தேர்தலில், இளைஞர் அணி நிர்வாகிகளின் தேர்தல் பணிகள் மற்றும் மக்களை சந்தித்து ஓட்டு சேகரிப்பது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார்.