வாணியம்பாடியில் மது போதையில் ஓசியில் டீக்கடையில் சிகரெட் கேட்டு ரகளையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பைபாஸ் சாலையில் அன்பு என்பவர் டீக்கடை மற்றும் சில்லறை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். நேற்று கடைக்கு மது போதையில் வந்த பெருமாள் பேட்டை பகுதியை சேர்ந்த பொன்முடி என்பவர் கடையில் இருந்த ஊழியரிடம் ஓசியில் சிகரெட் கேட்டுள்ளார். கடையில் இருந்த ஊழியர் கொடுக்க மறுத்ததால் மது போதையில் இருந்த பொன்முடி கடையில் இருந்த கண்ணாடி பாட்டில் மூடியை எடுத்து வீசி எறிந்ததில் கடை ஊழியர் கைப்பகுதியில் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

ரத்த காயத்துடன் மீட்கப்பட்ட அவருக்கு, வாணியம்பாடி மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற வாணியம்பாடி நகர காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு மதுபோதையில் ஓசியில் டீக்கடையில் சிகரெட் கேட்டு ரகளையில் ஈடுபட்டு பொன்முடியை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version