Close Menu
    What's Hot

    ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியல.. 2.0 தேவைப்பட்டாலும் முப்படைகள் தயார்..!! ராணுவ தலைமை தளபதி அதிரடி..!!

    4 – 5 நாள்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்!. வானிலை ஆய்வு மையம்

    தவெக அரசின் குதிரைபேரம் ; ஆளுநர் நடவடிக்கை எடுக்க அதிமுக தரப்பில் புகார் மனு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»அதிமுகவில் அடுத்த சரவெடி..!! Ex எம்.பி இளவரசன் விலகல்..!!
    Featured

    அதிமுகவில் அடுத்த சரவெடி..!! Ex எம்.பி இளவரசன் விலகல்..!!

    editor5By editor5May 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 21 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி. இளவரசன், கட்சியில் உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை என்று இளவரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

    2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் கடும் புயலை சந்தித்து வருகிறது. குறிப்பாக, அ.தி.மு.க.வில் நிலவும் உள்கட்சி சலசலப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், பல முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் முக்கிய தொண்டர்கள் கட்சியை விட்டு விலகும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் எம்.பி. திருச்சி ஆ.இளவரசன் தனது பதவிகளிலிருந்து விலகியுள்ளார். தனது விலகல் முடிவை அவர் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    1983 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் இணைந்து பணியாற்றி வரும் இளவரசன், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரின் ஆசியால் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர். கடந்த 42 ஆண்டுகளாக எந்தச் சூழலிலும் கட்சியை மாற்றாமல், கட்சி பிளவுபட்ட காலங்களிலும் தனது அணியை மாற்றாமல் விசுவாசத்துடன் பணியாற்றியவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக “துடுப்பு இல்லாத படகு” போல் அல்லாடுவதாகவும், லட்சக்கணக்கான தொண்டர்கள் கண்ணீர் விடும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் இளவரசன் தனது கடிதத்தில் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தபோது மிகுந்த நம்பிக்கை இருந்ததாகக் கூறிய அவர், அந்த நம்பிக்கை நிலை குலைந்து போனதற்கு கட்சித் தலைமையின் நடவடிக்கைகளே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

    “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அனைத்து தேர்தல்களிலும் உழைப்புக்கும் விசுவாசத்துக்கும் இடமில்லாமல் போனது. பணம் மற்றும் புதியவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதன் விளைவாக அதிமுக தொடர்ச்சியாக 11 தேர்தல்களில் தோல்வியை சந்தித்தது” என்று இளவரசன் தெரிவித்துள்ளார். மேலும், தோல்விக்கான காரணங்களை ஆராயாமல், பொறுப்பேற்காமல், மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைகளை புறக்கணித்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

    “எதிர்க்கட்சியான திமுகவின் ஆதரவுடன் முதலமைச்சர் பதவிக்கு துணிந்தது கொடுமை” என்று சாடிய இளவரசன், அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து மனவேதனையுடன் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த விலகல் அதிமுகவுக்குள் ஏற்கெனவே நிலவும் அசௌகரியத்தை மேலும் அதிகரிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. ஜெயலலிதா காலத்து மூத்த தலைவர்கள் பலரும் கட்சியில் இருந்து விலகும் போக்கு அதிகரித்து வருவது, கட்சியின் எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இளவரசனின் விலகல் அதிமுகவில் புதிய புயலை கிளப்பும் வாய்ப்பு உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகர்நாடகா: டிகே சிவக்குமார் தலைமையில் 4 துணை முதல்வர்கள்..?? சித்தராமையா மகனுக்கு முக்கிய பதவி?
    Next Article தமிழ்நாடு காங்கிரஸில் மிகப்பெரிய ஊழல்!. ஜோதிமணி பகிரங்க புகார்!
    editor5

    Related Posts

    ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியல.. 2.0 தேவைப்பட்டாலும் முப்படைகள் தயார்..!! ராணுவ தலைமை தளபதி அதிரடி..!!

    May 30, 2026

    4 – 5 நாள்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்!. வானிலை ஆய்வு மையம்

    May 30, 2026

    தவெக அரசின் குதிரைபேரம் ; ஆளுநர் நடவடிக்கை எடுக்க அதிமுக தரப்பில் புகார் மனு

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியல.. 2.0 தேவைப்பட்டாலும் முப்படைகள் தயார்..!! ராணுவ தலைமை தளபதி அதிரடி..!!

    4 – 5 நாள்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்!. வானிலை ஆய்வு மையம்

    தவெக அரசின் குதிரைபேரம் ; ஆளுநர் நடவடிக்கை எடுக்க அதிமுக தரப்பில் புகார் மனு

    நாளை கடைசி நாள்! உடன்பிறப்பின் குரலில் கருத்துப் பதிவு செய்யுங்கள்: மு.க.ஸ்டாலின்!

    தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை.. நீங்க ஏன் பதறுறீங்க..?? அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் கேள்வி..!!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    May 30, 2026

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026

    குஜராத் டைட்டன்ஸ் இமாலய சாதனை!. ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்தது!

    May 30, 2026

    ஸ்கூட்டியில் சீறிய நல்ல பாம்பு!. அரசு பேருந்துக்குள் புகுந்ததால் பரபரப்பு!. அலறிய பயணிகள்!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.