Close Menu
    What's Hot

    நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மசோதாக்கள், அரசியல் மோதல்கள் என அனல் பறக்கும் அமர்வு

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திடீர் தொழில்நுட்ப கோளாறு.. முடங்கிய பேஸ்புக் சேவை.. உலகம் முழுவதும் பயனர்கள் பாதிப்பு..!!
    Featured

    திடீர் தொழில்நுட்ப கோளாறு.. முடங்கிய பேஸ்புக் சேவை.. உலகம் முழுவதும் பயனர்கள் பாதிப்பு..!!

    editor5By editor5July 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 25 10
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் த்ரெட்ஸ் உள்ளிட்ட பிரபல சமூக வலைத்தளங்கள் உலகம் முழுவதும் சுமார் 350 கோடி பயனர்களால் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவிலும் இந்த செயலிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

    இந்நிலையில், இன்று மதியம் திடீரென இந்த சேவைகளில் பெரும் கோளாறு ஏற்பட்டது. இந்தியா உட்பட பல நாடுகளில் பயனர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து தானாக லாக் அவுட் ஆவது, புதிய பதிவுகள் ஏற்கப்படாமல் இருப்பது, தொடர்ச்சியான எரர் மெசேஜ்கள் வருவது போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டனர். இந்த திடீர் முடக்கம் காரணமாக லட்சக்கணக்கானோர் சமூக ஊடகங்களில் புகார் பதிவு செய்தனர்.

    மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “தகவல் மையங்களுக்கு இடையேயான தொடர்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சிக்கல் உருவாகியுள்ளது. சில மணி நேரங்களில் சேவை முழுமையாக சரிசெய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளது. மேலும், இந்த இடையூறுக்கு வருத்தம் தெரிவித்து பயனர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளது. குறிப்பாக, மொபைல் போன்கள் மூலம் பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும், டெஸ்க்டாப் கணினிகள் (சிஸ்டம்) வழியாக அணுகுபவர்களுக்கு மட்டுமே இந்த சிக்கல் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடங்கல் காரணமாக வணிக நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் தனிநபர்களின் தகவல் பரிமாற்றம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் இன்று உலகளாவிய தகவல் தொடர்பின் முக்கிய அங்கமாக மாறியுள்ள நிலையில், இத்தகைய திடீர் கோளாறுகள் பயனர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு, டிஜிட்டல் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றன. மெட்டா நிறுவனம் விரைவில் சேவையை மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    facebook users
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுதிரை பேரம் விவகாரம் – கரூரில் பைனான்ஸ் அலுவலகத்திற்கு ’சீல்’  
    Next Article BLASTU.. BLASTU..!! களைகட்டும் ‘ஜனநாயகன்’ திருவிழா..!! திருப்பூரில் டி-ஷர்ட்-க்கு குவியும் ஆர்டர்கள்..!!
    editor5

    Related Posts

    நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மசோதாக்கள், அரசியல் மோதல்கள் என அனல் பறக்கும் அமர்வு

    July 19, 2026

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    July 19, 2026

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மசோதாக்கள், அரசியல் மோதல்கள் என அனல் பறக்கும் அமர்வு

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு மாணவர்கள்… கறி விருந்து கொடுத்த நடிகர் ஜீவா

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.