ஹார்ட் பீட்‘ தொடரில் ரீனா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை தீபா பாலு, அந்த தொடரிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வரும் ஹார்ட் பீட் இணையத் தொடரில் ரீனா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை தீபா பாலு. இந்தத் தொடரின் 2வது பாகம் நிறைவுற்று 3-வது சீசன் வரும் ஜூலை 30-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்லது.

2-வது சீசனின் முடிவில், ரீனா கதாபாத்திரத்துக்கு, கார்த்திக் குமார்தான் தனது தந்தை என்னும் விவரம் தெரிவதாகவும், ரீனா கோமாநிலைக்குச் செல்வது போன்றும் முடிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 3-வது சீசனின் அறிவிப்பு வெளியான நிலையில், ரீனா கதாபாத்திர நடிகை தீபா பாலு, தடாலடியாக வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

“சில இடங்களில்… சில மனிதர்களை… விட்டுப்போவது எளிதல்ல. ஆனால் சில ’பிரிவு’ நமது நல்லதுக்காகத்தான். எப்போதும் நன்றியுடன் இருப்பேன். மிக்க நன்றி” என தீபா பாலு பதிவிட்டுள்ளதால், அவர் ஹார்ட் பீட் தொடரில் இருந்து விலகுவதாக தகவல் பரப்பப்படுகிறது. அதே நேரம், இந்த தொடரின் புதிய சீசனுக்கான புரோமோஷனாகவும் இது பார்க்கப்படுகிறது.

தீபா பாலுவின் விலகல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டால், ஹார்ட் பீட் தொடரின் மிகவும் நேசிக்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்றின் பயணம் முடிவுக்கு வரும் என ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், ரீனா கதாபாத்திரத்தின் எதிர்காலம் என்ன? தீபா பாலுவுக்கு பதிலாக வேறு யாராவது அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்களா? என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

எனினும், இதுவரை தீபா பாலு அல்லது தொடர் தயாரிப்பு தரப்பில் இருந்து அவரது விலகல் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version