கரூர் மாவட்டம் கடவூர் பகுதியில் விவசாயி ஒருவர் மீது மர்ம நபர்கள் நாட்டுத்துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

கடவூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி கருணகிரி, தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், திடீரென கருணகிரியை நோக்கி நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர்.

இந்த தாக்குதலில் கருணகிரியின் முதுகில் சுமார் 10 தோட்டாக்கள் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பட்டப்பகலில் விவசாயி மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கருணகிரியைச் சுட்ட மர்ம நபர்கள் யார், எதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது, முன்விரோதம் ஏதேனும் காரணமா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version