மார்ச் 2 – திண்டிவனம் இந்துமதி
மார்ச் 28 – கிளாம்பாக்கம் தர்ஷினி
ஏப்ரல் 3 – பெரியமுத்தியம்பட்டி சத்யா
ஏப்ரல் 4 – புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி
மே 20 – சேலம் நரசோதிப்பட்டி கௌதம்
நீட் தேர்வுக்கு அஞ்சி இரண்டு மாத காலத்தில் 5 மாணவச் செல்வங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் சட்டப்போராட்டங்கள் கடலில் கரைத்த பெருங்காயமாக உள்ளன. மத்திய அரசோ, உயிரைப் போக்கிக் கொள்ளும் மாணவ-மாணவிகளை வெறும் எண்ணிக்கையாக பார்க்கிறது.
மருத்துவப் படிப்புதான் பெரிது என்று பிள்ளைகளுக்கு நெருக்கடி கொடுக்கும் பெற்றோரை குறைசொல்வதா?
பெரியண்ணன் மனோபாவத்தில் இருக்கும் மத்திய அரசைக் குறை சொல்வதா?
கையறு நிலையில் இருக்கும் தமிழக அரசை நொந்து கொள்வதா?
கடைசியில் இழப்பு என்னவோ? ஆசை, ஆசையாய் வளர்த்த பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோருக்குத் தான்.