அசாம் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானது.

அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் உள்ள விமானப்படை தளத்தில், இந்திய விமானப்படையின் ஏஎன்-32 (AN-32) ரக போக்குவரத்து விமானம் இன்று தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து நடந்ததை இந்திய விமானப்படையும் உறுதிப்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையினர் அங்கு துரித நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் நிகந்துள்ளதாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. விபத்துக்கான காரணம் குறித்தும் இன்னும் தகவல் வெளியாக வில்லை.

இந்திய விமானப்படை அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version