இந்திய ரயில்வே சார்பில் இணையதளம் வாயிலாக பயணிகள் தங்களது டிக்கெட்களை புக் செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம். இதன் மூலம் ஜெனரல் டிக்கெட் முதல் ப்ரீமியம் தக்கல் வரை வீட்டில் இருந்தவாரே மக்கள் தங்களது பயனத்திற்கான டிக்கெட்களை முன்பதிவு செய்யமுடியும்.
தற்போதுள்ள நிலவரப்படி, 82 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் முன்பதிவு செய்கின்றனர். ஆனால், தட்கல் முன்பதிவின்போது, அடிக்கடி ‘சர்வர்’ பிரச்சினை ஏற்படுகிறது. ‘கேப்ட்சா’ குறியீடுகளும் கடினமாக இருக்கிறது. தொழில்நுட்ப கோளாறுகளால் டிக்கெட் முன்பதிவின் போது அடிக்கடி தோல்வியில் முடிவதாக பயணிகள் சார்பில் பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டது.
இந்தநிலையில், பயணிகள் சிரமம் இல்லாமல் எளிதில் முன்பதிவு செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
