கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. அதன்படி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
காங்கிரஸ் மட்டுமே 63 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கூட்டணி கட்சிகளான கைப்பற்றியது. மேலும் கேரள காங்கிரஸ் 7 இடங்களிலும், புரட்சி சோஷியலிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், இன்னப் பிற கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்கள் 4 பேரும் வெற்றி பெற்றனர். ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 35 இடங்களிலும், பா.ஜனதா முதன் முறையாக 3 தொகுதிகளிலும் வென்றது.
10 நாட்கள் இழுபறிக்கு பின்னர், எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டீ.சதீசனை முதலமைச்சராக தேர்வு செய்து காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது. அதன்படி நாளை அவருக்கு முதலமைச்சராக நாளை ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிபிரமாணம் செய்து வைக்கிறார்.
நாளை திருவனந்தபுரத்தில் உள்ள செண்ட்ரல் ஸ்டேடியத்தில் காலை 10மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எம்.பி மற்றும் தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இவ்விழாவில் மொத்தம் 75,000த்தில் இருந்து 1லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

