தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வரும் முன்பாகவே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்னும்  குரல்கள் காங்கிரஸில் இருந்து எழுந்துள்ளன. ஆனால், இந்தக் குரல்களின் பின்னணியில் மறைந்திருப்பது தலைமைப் பதவிக்கான தவிப்பில் இருப்பவர்கள்தான்.

கட்சியை வளர்ப்பதற்கான எவ்வித நோக்கமும் இல்லாமல்,  வலிமையான தலைமைக்குகைகொடுக்காமல், கட்சியை வளர்க்க எந்த திட்டமும் இல்லாத

இவர்களின் நோக்கம் தலைமைப் பதவியைக் கைப்பற்றுவது மட்டும்தான். தவிர காங்கிரஸை வலுப்படுத்துவதோ அல்லது  வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமராக்கும் முயற்சிகளுக்கானதோ அல்ல… அது காங்கிரஸ் இயக்கத்தை பலவீனப்படுத்தும் திட்டமிட்ட சதி அரசியல்.ஆகும்

ஆனால், தலைமை என்பது பதவி அல்ல அது பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட்டவர்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப் பெருந்தகை.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பல தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களில் தனது நேர்மை, துணிவு, மக்களுடன் இணையும் திறன் ஆகியவற்றால் தனித்துவமாக மிளிர்பவர் கு.செல்வப் பெருந்தகை.

காங்கிரஸ் கட்சியை ஒழுங்குபடுத்தி அமைப்பை கட்டமைத்து தேர்தல் களத்திற்கு தயார்படுத்திய பணியை கு.செல்வப்பெருந்தகை மிகத் தெளிவாகவும் உறுதியான முறையிலும் செய்திருக்கிறார். இது தேர்தல் முடிவில் நிச்சயம் எதிரொலிக்கும்.

அடிமட்டத் தொண்டர்களும் கு.செல்வப்பெருந்தகையை எளிதில் அணுகி கட்சி சார்ந்த தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.

சமூக முன்னேற்றம், சமத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் மக்கள் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு, அதற்கான வழிமுறைகளை வகுக்கும் திறன் அவரிடம் தெளிவாகக் காணப்படுகிறது

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கு.செல்வப்பெருந்தகை  ஒரு சாதாரண தலைவர் அல்ல, பட்டை தீட்டப்பட்ட வைரம் போல காங்கிரஸ் இயக்கத்தில் மேலும் ஒளிர்வார். உயர்வார். அவர் தலைவராகத் தொடர்வதே தமிழ்நாடு காங்கிரஸை இன்னும் ஜொலிக்க வைக்கும். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கான பாதையை நோக்கி அழைத்துச் செல்லும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version