தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:-
திரையுலகில் இயக்குநராகவும், நடிகராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் தனித்துவமான முத்திரையைப் பதித்த கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
தனது படைப்பாற்றலால் நகைச்சுவை உணர்வு மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவு கூறத்தக்கவை.
அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
