Close Menu
    What's Hot

    எந்தவொரு அதிகாரமும் இல்லாத இந்த ‘சிறப்பு படை’யால் மக்களுக்கு என்ன பயன்? கனிமொழி எம்.பி.!

    அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம்!. அந்த 14 முக்கிய அம்சங்கள் என்னென்ன?

    ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை..!! அக்கவுண்ட்டில் வந்தாச்சு ரூ.1000..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி உயிரிழப்பு..!! கும்மிடிப்பூண்டியில் சோகம்..!!
    Featured

    பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி உயிரிழப்பு..!! கும்மிடிப்பூண்டியில் சோகம்..!!

    editor5By editor5June 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 32 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி புதரில் வீசப்பட்ட 3 வயது வடமாநில பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழிற்சாலைகளில் பணியாற்றுவதற்காக பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பங்களுடன் குடியேறி வாடகை வீடுகளில் தங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில், வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் 3 வயது பெண் குழந்தை திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து பல்வேறு இடங்களில் குழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்குப் பின்னரும் குழந்தை கிடைக்காததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    அப்போது அருகிலுள்ள முட்புதர் பகுதியில் இயற்கை உபாதைக்காகச் சென்ற சில பெண்கள், காயமடைந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த குழந்தையை கண்டுபிடித்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

    மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவம் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    விசாரணையில், அருகில் வசித்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் குற்றச்சாட்டுக்குட்பட்ட இளைஞரை பிடித்து தாக்கிய பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், இந்த சம்பவத்தில் ஒருவருக்கு மேற்பட்டோர் தொடர்புடையிருக்கலாம் என்ற சந்தேகத்தை முன்வைத்து, சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிப்காட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதுடைய பிபின் மஞ்சி என்பவரை கைது செய்த காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleE100 எத்தனால் எரிபொருளுக்கு கிடைச்சாச்சு கிரீன் சிக்னல்..!! மத்திய அரசு ஒப்புதல்..!!
    Next Article தமாகாவில் இருந்து விலகல்; தவெகவில் இணைகிறாரா யுவராஜா?
    editor5

    Related Posts

    எந்தவொரு அதிகாரமும் இல்லாத இந்த ‘சிறப்பு படை’யால் மக்களுக்கு என்ன பயன்? கனிமொழி எம்.பி.!

    June 15, 2026

    அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம்!. அந்த 14 முக்கிய அம்சங்கள் என்னென்ன?

    June 15, 2026

    ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை..!! அக்கவுண்ட்டில் வந்தாச்சு ரூ.1000..!!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எந்தவொரு அதிகாரமும் இல்லாத இந்த ‘சிறப்பு படை’யால் மக்களுக்கு என்ன பயன்? கனிமொழி எம்.பி.!

    அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம்!. அந்த 14 முக்கிய அம்சங்கள் என்னென்ன?

    ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை..!! அக்கவுண்ட்டில் வந்தாச்சு ரூ.1000..!!

    தங்கம் விலை அதிரடி உயர்வு; சவரன் ரூ.1,12,560க்கு விற்பனை

    ஹாஸ்பிடலில் அட்மிட்..!! என்ன ஆச்சு சனம் ஷெட்டிக்கு..?? வருத்தத்தில் ரசிகர்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.