கொல்கத்தாவில் மே 3 முதல் ஜூலை 1-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ம் தேதி முதற்கட்டமாகவும், 142 தொகுதிகளுக்கு கடந்த 29-ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. பல வாக்குச்சாவடிகளில் பாஜகவின் சின்னம் டேப் ஒட்டி மறைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதனையடுத்து இரண்டு தொகுதிகளுக்கு உட்பட்ட 15 வாக்குச்சாவடி மையங்களில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்தது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், கொல்கத்தாவில் நாளை முதல் 60 நாட்களுக்கு 144 தடை பிறக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நாளன்று வன்முறை போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக உளவுத்துறையின் தகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version