மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல்காந்தி, இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

https://x.com/narendramodi/status/2067808457689076067?

அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்

https://x.com/CMOTamilnadu/status/2067811944313327618

இதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் வாழ்த்து செய்தியில், எனது அன்புச் சகோதரர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version