கடந்த மாதம் 24-ம் தேதி வெனிசுலாவின் தலைநகரம் உட்பட பல பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. 7.1 மற்றும் 7.5 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால், பல இடங்களில் அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்தன. விமான நிலையம் முதல் தெருக்களில் உள்ள வீடுகள் வரை பல இடங்களில் சுவர்களும், மேற்கூரைகளும் இடிந்து விழுந்ததில், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. 1900ஆம் ஆண்டிற்குப் பிறகு வெனிசுலாவைத் தாக்கிய மிக மோசமான மற்றும் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது. இந்த இயற்கை பேரிடரால் வெனிசுலா நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நேரடிப் பொருளாதார இழப்பு மட்டும் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.95,000கோடிக்கும் அதிகம் என சர்வதேச பேரிடர் மற்றும் அபாயக் கணிப்பு தொழில்நுட்ப நிறுவனமான வெரிஸ்க் தெரிவித்துள்ளது.

ஐநா சபையின் சர்வதேச வளர்ச்சி அமைப்பான UNDP வெளியிட்டுள்ள முதற்கட்ட செயற்கைக்கோள் தரவுகளின்படி, ந்த சேத மதிப்பு வெனிசுலாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 6 சதவீதத்திற்கும் அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது. தலைநகர் காரகாஸ் மற்றும் அதன் கடலோர மாநிலமான லா குவைராவில் மட்டும் சுமார் 1,400-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பெரிய வணிக வளாகங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.

இந்த கோர விபத்தில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 920-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3,000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மீட்புப் பணிகள் ராணுவ உதவியுடன் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் 86லட்சம் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெனிசுலாவில் ஏற்கனவே நிலவி வரும் கடுமையான பணவீக்கம், பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச பொருளாதாரத் தடைகள் காரணமாக, காப்பிட்டுத் தொகைகளை வழங்குவதிலும், உள்கட்டமைப்புகளை சீரமைப்பதிலும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் அரசுக்கும் பெரும் சவால்களும் சுணகமும் ஏற்பட்டுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version