தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் கொளுத்தி வரும் நிலையில், ஆங்காக்கே மழையும் பெய்து வருகிறது. இந்த மழையால் வெப்பம் குறைந்து சீதோஷ்ண நிலை தமிழ்நாட்டில் சற்று மாறியுள்ளது.

இந்த நிலையில், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய இலங்கை பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தெற்கு உள்கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் 16-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version