திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சியை அமைக்க தொடர்ந்து குறுக்குவழியில் திட்டமிட்டு வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக ஐ.யு .எம். எல் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார்.

“திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பதாக ஒரு மாதத்திற்கு முன்பே நாங்கள் கூறியிருந்தோம்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து வெளியே வருவதற்கு இதுதான் காரணம் என்றார்.

தங்களின் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்காக  மு.க.ஸ்டாலினும், மற்றும் எடப்பாடி கே. பழனிசாமியும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டியவர்,  மேலும், “பாஜகவின் முழு ஆதரவுடன் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க  தொடர்ந்து குறுக்கு வழியில் முயற்சி செய்துவருவதாகவும், இறுதியில் திமுகவும் அதிமுகவும் தனித்தே நிற்கும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

இன்னும் சில ஆண்டுகளில் இந்த இரண்டு கட்சிகளும் பாஜகவுடன் இணைந்துவிடும். இருவரும் தனியாக நிற்பதோடு, பாஜக அமைச்சரவையில் ஆளுக்கு ஒரு அமைச்சர் பதவி வாங்கிக் கொள்வார்கள் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இன்னமும் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.

தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகத்திற்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி இருக்கும் என்று எங்கள் தலைவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது ஒட்டுமொத்த தீய சக்திகளுக்கு எதிராக தமிழக வெற்றி கழகம் நிற்கிறது. கூட்டணி கட்சிகளின் முழு ஆதரவுடன் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

வைகோ குறித்த கேள்விக்கு, பதவிக்கும், பணத்துக்கும் ஆசைப்படாதவர் வைகோ என்று கூறினார்.

ஆளுநரை சந்தித்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “ஆளுநருடனான சந்திப்பு பொதுவான மரியாதை நிமித்தமாகவும், அலுவல் ரீதியாகவும் நடைபெற்றது. அதற்கு வேறு எந்த அரசியல் பின்னணியும் இல்லை” என்று விளக்கம் அளித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version