Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை.. நீங்க ஏன் பதறுறீங்க..?? அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் கேள்வி..!!
    Featured

    தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை.. நீங்க ஏன் பதறுறீங்க..?? அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் கேள்வி..!!

    editor5By editor5May 30, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 38
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற ஆய்வின்போது அர்ச்சகர்களை அமைச்சர் ரமேஷ் இழிவுபடுத்தியதாக முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்தார். பல தலைமுறைகளாக பாரம்பரிய முறைப்படி ஆன்மிகப் பணியாற்றி வரும் திரிசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தையும் அமைச்சர் ரமேஷ் கடுமையாக அவமதித்ததாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ரமேஷ், தனது எக்ஸ் பக்கத்தில் விரிவான விளக்கம் அளித்து, தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

    அமைச்சர் ரமேஷ் தனது பதிவில், “அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களே, உங்களைப் போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் சேர்த்து அழைக்கும் வழக்கம் பெரியாரைப் பின்பற்றுபவர்களுக்கு உரியதல்ல” எனக் குறிப்பிட்டார். மக்கள் சுரண்டல் எதிர்ப்பில் சாதி, மத பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்க வாக்களித்துள்ளதால், பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெறும் செயலுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தார். “பக்தர்களிடம் பணம் பெற்றுத்தான் சேவை செய்ய வேண்டும் என்பது தவறு. அது சேவையும் அல்ல, எந்தக் கடவுளும் அப்படி செய்யச் சொல்லவில்லை” என வலியுறுத்தினார்.

    மேலும், “நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறோம் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியைச் சேர்ந்தவர்களை அவமதித்துவிட்டதாகக் கூறுகிறீர்கள். தவறு செய்தவர்களைத் தண்டித்தால் ஏன் திடீர் கொந்தளிப்பு?” என அனிதா ராதாகிருஷ்ணனுக்கு கேள்வி எழுப்பினார். திருச்செந்தூர் கோயிலில் இன்னும் பல முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், அவற்றை விரைவில் வெளியிடுவேன் என்றும் அமைச்சர் எச்சரித்தார். “குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்” எனத் திட்டவட்டமாகக் கூறினார்.

    இந்த சம்பவம் திருச்செந்தூர் கோயிலில் நிலவும் நிர்வாக முறைகேடுகள், அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களிடையே உள்ள பிரச்சினைகள் ஆகியவற்றை மீண்டும் விவாதப் பொருளாக்கியுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், பக்தர்களிடமிருந்து சட்டவிரோதமாக பணம் வசூல் செய்யப்படுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன. அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

    அமைச்சர் ரமேஷின் இந்த உறுதியான நிலைப்பாடு, கோயில் நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வரும் அரசின் முயற்சிக்கு வலுச்சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் பணம் சுரண்டப்படாமல், பக்தர்கள் அமைதியாக வழிபடும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அறநிலையத் துறை மேலும் விரிவான அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுடிவுக்கு வந்த பிரச்சனை..!! இபிஎஸ் கைக்கு போன விழுப்புரம் மாவட்ட அலுவலகம் சாவி..!!
    Next Article நாளை கடைசி நாள்! உடன்பிறப்பின் குரலில் கருத்துப் பதிவு செய்யுங்கள்: மு.க.ஸ்டாலின்!
    editor5

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.