ர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், அளவுக்கு அதிகமாக நீரைத் தேக்கினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆபத்து உருவாகும் என்பதால்,   “இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல” என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்  கருத்து பதிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகக் காவிரி நீர் பங்கீடு தொடர்பாகத் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தமிழகத்திற்குத் தினமும் 3,500 கனஅடி நீர் வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும் எனப் புதுடெல்லியில் உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், தங்கள் மாநிலக் குடிநீர் தேவையைச் சுட்டிக்காட்டி கர்நாடகா நீர் திறக்கத் தயக்கம் காட்டியது.

இதனிடையே, மேகதாது அணை கட்டும் விவகாரம் மற்றும் காவிரிப் பிரச்சினை தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே சுமூகத் தீர்வு காணத் தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்ல இருந்த சூழலில், எல்லைப் பகுதிகளில் கன்னட அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் மற்றும் முற்றுகை அறிவிப்புகள் நிலைமையை மேலும் சிக்கலாக்கின. இதனால் அவரை கர்நாடகா வர வேண்டாம் என முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், காவிரியில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அத்துடன் கடை அடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளன.

இந்த நிலையில், கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் அணை உள்ளிட்ட முக்கிய அணைகளுக்கான நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீரை திறந்துவிட வேண்டிய கட்டாயம் கர்நாடகாவுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கர்நாடகாவின் கபினி அணைக்கு வினாடிக்கு 15,675 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருப்பதால், கபினி அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

இதனையடுத்து,  ”இயற்கையாருக்கும் சொந்தமானது அல்ல. கர்நாடக அணைகள் நிரம்பி வருகின்றன. இந்த நேரத்தில் அதிக நீரை தேக்கினால்வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவோம். தமிழ்நாட்டிற்கு எதிரான கடையடைப்பு அறிவிப்பை திரும்ப பெறுக…” என கர்நாடக  முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கருத்து பதிவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version