மயிலாடுதுறையில் காதலர்கள் தற்கொலை விவகாரத்தில் இறந்த பார்த்திபனின் தந்தை பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், தரங்கம்பாடி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சாத்தங்குடி கிராமத்தில் காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உயிரிழந்த பார்த்திபனின் தந்தை மாரிமுத்து பொறையார் காவல் நிலையத்தில் புகார். பெண் வீட்டார் ஆணவ கொலை செய்துள்ளதாகவும், நேற்று இரவு வெளியூரிலிருந்து வெளிநபர்கள் தங்கள் ஊருக்கு வந்திருந்ததாகவும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் மோகன்குமார், அன்பரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஏராளமானோர் காவல் நிலையம் முன்பு திரண்டனர்.
மாவட்டத்தின் பொறுப்பு எஸ்.பி ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தரங்கம்பாடி சாலைக்கு வந்த பார்த்திபனின் உறவினர்கள் மற்றும் கட்சியினர் பெட்ரோல் பங்க் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாரிமுத்து அளித்துள்ள புகாரில் சம்பவம் நடந்த இடத்தில் கொள்ளையின் கேட்டில் இருந்த ரீப்பர் கொட்டகையின் கேட் அருகில் இருந்த மூங்கில் பிளாச்சிலும் இரத்த கரைகள் இருந்தன.
ஆறு மாதங்களாக எனது மகனை மிரட்டி, நேற்று இரவு பெண் வீட்டார் மற்றும் பலரும் எனது மகனை அடிந்து கொடுமைக்குள்ளாக்கி பார்த்திபனையும் சிறுமியையும் கொன்றது சிறுமியின் தந்தை லெட்சுமிகாந்தன் மற்றும் வெளியூரிலிருந்து வந்த அடியாட்கள் என்றும், அவர்கள் திட்டமிட்ட ஆணவ படுகொலை செய்துள்ளார்கள் என்றும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். கொலை வழக்கு பதிவு செய்தால்தான் பிரேத பரிசோதனை செய்வதற்கு திருவாரூர் செல்வம் என்று கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தரங்கம்பாடி மயிலாடுதுறை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
