கோவை பீளமேடு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

நடந்து முடிந்த தேர்தலில் திமுக அதிமுக இல்லாத ஆட்சி வேண்டும் என்று தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

இத்தகைய சூழலில் அதிக எம்.எல்.ஏ உள்ள கட்சி என்பதால் தவெகவுக்கு வெளியில் இருந்து நாங்கள் ஆதரவு கொடுத்தோம்.

தற்பொது மக்கள் தீர்ப்பை ஏற்க மறுத்துதான்,  குதிரை பேரம் கழுதை பேரத்தில் ஈடுபட்டுக் கொண்டு உள்ளார்கள்.

ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருக்க முடியாததால் திமுக இந்த முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது.

ஆட்சி மாற்றம் என ஸ்டாலின் பேசியதன் வெளிப்பாடு தான் MLA பேரம் என்பது இப்போதுதான் தெரிய வருகிறது.

இடதுசாரிகளை தவிர ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு செல்வது சகஜம். ஆனால் கட்சி மாறுவதற்காக கோடிக்கணக்கான ரூபாய்க்கு வாங்குவது என்றால் சரியல்ல.

4 MLA கள் TVK இல் சேர்ந்தபோதே இதை ஊக்குவிக்க கூடாது என தவெக தலைமையிடம் தெரிவித்தோம். அப்போது, அவர்களே தாமாக முன் வருவதாகக் கூறினர்.

அப்படி வந்தால் ஏன் சேர்த்து ஊக்கம் கொடுக்கிறீர்கள் என எங்கள் கருத்தை முன் வைத்துள்ளோம் எனக் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version