ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதிகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உலகளாவிய விநியோகம் மற்றும் கப்பல் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என கூறப்படுகிறது.

 30 நாட்களுக்கு மட்டும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கிக் கொள்ள இந்தியாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், போதுமான இருப்பு இருப்பதாக மத்திய அரசு கூறி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவு, உலகச்சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 9% அதிகரித்து, ஒரு பேரல் தற்போது 93 அமெரிக்க டாலராக இந்திய விலையில் ரூ.8,550ஆக விற்பனை செய்யப்படுகிறது.

 2020-ம் ஆண்டுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை தற்போது அதிகபட்ச உச்சத்தை எட்டியிருப்பதால், இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இது இந்தியாவிலும் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. போர்பதற்றம் தொடர்ந்து நீடித்தால், இந்தியாவில் இருக்கும் இருப்பு குறையும். இருப்பு குறையும் போது பெட்ரோல், டீசல் விலை உயரவும் வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version