தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 110க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளில் களமிறங்கிய முதல் சட்டமன்ற தேர்தலிலேயே ஆட்சியைக் கைப்பற்றும் அளவில் முன்னிலை வகித்துள்ளது.

தவெக தலைவருக்கு சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடியும் தவெகவின் செயல்பாட்டுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் NDA-வுக்கு ஆதரவு அளித்த தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு நன்றி. மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம் எனவும், TVK-வின் சிறப்பான செயல்பாட்டுக்கு வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்லார். தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், மக்களின் நலனுக்காகவும் மத்திய அரசு எந்த உழைப்பையும் விடாது செயல்படுத்தும் எனவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

 

 

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version